வீதி போக்குவரத்து குற்றங்களுக்காக அறவிடப்படும் அபராதம் 25 ஆயிரம் ரூபா வரையில் அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.
வீதி போக்குவரத்து ஒழுங்குகளை பேணுவதற்கு இவ்வாறான தண்டனைகள் அவசியம் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
குறைந்த வயதுடையவர்கள் வாகனங்களை செலுத்துதல், அனுமதி பத்திரமற்றவர்கள் வாகனங்களை செலுத்துதல் மற்றும் மதுபோதையில் வாகனகங்களை செலுத்துதல் ஆகிய மூன்று காரணங்களுக்காக 2 ஆயிரத்து 500 ரூபா அபராதம் விதிக்கப்படும்.