லிந்துலையில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண் உயிரிழப்பு

276 0

லிந்துலை மட்டுகலை தோட்டத்தில் குளவிக்கொட்டுக்கு இலக்காகி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.

தேயிலை மலையில் தேயிலை கொய்துகொண்டிருந்தவேளை, நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 3.30 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இந்த சம்பவத்தில் நான்கு பிள்ளைகளின் தாயான 59 வயதுடைய தோட்டத் தொழிலாளரி ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, குளவிக்கொட்டுக்கு இலக்கான மேலும் 7 பேர் லிந்துலை வைத்தியசாலையில் சிகிச்சைக்களுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.