சென்னையில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது.
தமிழகத்தில் நேற்றைய நிலவரப்படி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 24,586ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 13,706 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 197-ஆக இருந்தது.
இந்நிலையில் சென்னையில் கொரோனாவுக்கு 3 பேர் உயிரிழந்ததால் தமிழகத்தில் தொற்றுக்கு பலியானோர் எண்ணிக்கை 200-ஆக உயர்ந்துள்ளது.
சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வந்த 3 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் தமிழகத்தில் கொரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 197-லிருந்து 200-ஆக உயர்ந்துள்ளது.
மேலும் ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அறிகுறியுடன் கொரோனா வார்டில் சிகிச்சை பெற்று வந்த 6 பேர் உயிரிழந்துள்ளனர். பலியான 6 பேருக்கும் கொரோனா இருப்பது உறுதியானால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 206-ஆக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.