இந்தியாவின் உத்தர பிரதேஷத்தை நோக்கி பயணித்த பயணிகள் தொடருந்து ஒன்று கான்பூர் அருகே விபத்துக்கு உள்ளாகியது.
இந்த விபத்தில் குறைந்தது 63 பேர் பலியானதுடன் நூறுக்கும் மேற்பட்டவர்கள் காயடைந்துள்ளதாக வட மத்திய தொடருந்து சேவைகளின் பேச்சாளர் விஜேகுமார் தெரிவித்துள்ளார்.
14 தொடருந்து பெட்டிகள் முற்றாக சேதமடைந்துள்ளன.
மீட்புப் பணிகள் இடம்பெறுவதுடன் அந்த பிரதேசத்திற்கு மருத்துவ குழு ஒன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் இடம்பெற்றதனை அடுத்து இந்திய பிரதமர் நரேந்திர மோடி தொடருந்து அமைச்சர் சுரேஷ் பிரபுஹலுடன் தொடர்புகொண்டதுடன் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தும்படியும் பணிப்புரை விடுத்துள்ளார்.