கொரோனா வைரஸை ஒழிக்கும் நோக்கில், உலக நாடுகள் பல போட்டி போட்டு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளன.
இந்நிலையில் ரஷ்யா தடுப்பூசி ஒன்றை கண்டுபிடித்துள்ளது. இதன் ஆரம்பக்கட்ட சோதனை நடவடிக்கைகள் முடிவுக்கு வந்துள்ளன என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, தடுப்பூசியை செலுத்தி பரிசோதிப்பதற்காக ரஷ்ய இராணுவத்தில் உள்ள 50 அதிகாரிகள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.