பொதுமக்களின் பாதுகாப்பிற்காகவே ஜூன் 20 ம் திகதி பொதுத்தேர்தலை நடத்தும் வர்த்தமானி அறிவித்தலிற்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன என ஐக்கியதேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்துமபண்டார தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்றம் தனது அறிவிப்பை வெளியிட்ட பி;ன்னர் அவர் இதனை தெரிவித்துள்ளார்.கொரோனா வைரசிற்கு மத்தியில் பொருத்தமான சூழலில் தேர்தலை நடத்தவேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.
பொதுமக்களின் உயிர்கள் பாதுகாக்கப்படவேண்டும் என தெரிவித்துள்ள அவர் தேர்தல் எந்தநேரத்தில் இடம்பெற்றாலும் அதனை எதிர்கொள்ள ஐக்கிய மக்கள் சக்தி தயாராகவுள்ளது என குறிப்பிட்டுள்ளார்.