தேர்தல் ஆணைக்குழு நாளை அவசரமாகக் கூடுகின்றது: ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் பொதுத் தேர்தல்

310 0

தேர்தல் தொடர்பான மனுக்களை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில் நாளை காலை அது குறித்து ஆணைக்குழு கூடி தீர்மானங்களை எடுக்கும். ஆணைக்குழுவின் இதர உறுப்பினர்களும் கூட்டத்திற்கு வருவார்கள்.

என தேர்தல் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார். அடுத்த கூட்டம் எட்டாம் திகதி நடத்துவதற்கு இன்று காலை ஆணைக்குழு கூடியபோது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பையடுத்து நாளை காலை ஆணைக்குழு கூடும். தேர்தல் திகதி குறித்த முடிவு அதன்போது எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

இருந்த போதிலும் ஆகஸ்ட் இரண்டாம் வாரத்தில் – பெரும்பாலும் 8 அல்லது 10 ஆம் திகதி பொதுத் தேர்தல் நடைபெறும் என உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரியவருகின்றது.