தமிழ் மக்கள் எதிர்வரும் பொதுத் தேர்தலில் எதிர்காலத்தை சிந்தித்துப் பார்த்தே வாக்களிக்க வேண்டும் என ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சித் தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன் தெரிவித்தார்.
யாழில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர், அரசாங்கம் தனது தேவைக்கு ஏற்றவகையில் சட்டத்தை மாற்றியமைப்பதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
இதேவேளை தேர்தல் நெருக்கும் காலக்கட்டத்தில், ஜனாதிபதியையும், பிரதமரையும் சம்பந்தன் உள்ளிட்ட தரப்பினர் சந்தித்து கலந்துரையாடுவது, தமிழர்களை ஏமாற்றும் செயற்பாடு என்றும் அவர் கூறியுள்ளார்.