கண்டி அங்கும்புர பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் பலியானார்.
இந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக அங்கும்புர காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
சம்பத்தில் மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கண்டி மருத்துவமனையின் அவசர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வருகின்றார்.