சிறிலங்காவில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகளுக்கும் பூட்டு

294 0

சிறிலங்காவில் பொசன் தினத்தை முன்னிட்டு அனைத்து மதுபானக் கடைகள், இறைச்சிக் கடைகள், சூதாட்ட விடுதிகள், இரவு விடுதிகள் மூடப்படும் என்று கலால் துறை தெரிவித்துள்ளது.

பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் ஜூன் 05 ஆம் திகதி வெளியிட்டுள்ள HA-01 / 02/08/01 கடிதத்தின்படி இந்த ஆண்டுக்கான பொசன் பௌர்ணமி போயா தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனவே மேற்கூறிய இடங்கள் மற்றும் பல்பொருள் அங்காடிகளில் இறைச்சி மற்றும் மதுபானங்களை விற்பனை செய்வது ஜூன் 05 மற்றும் 06 திகதிகளில் தடை செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.