நுவரெலியாவில் தீ வீபத்து

393 0

சிறிலங்காவில்  நுவரெலியா- றம்பொடை, வௌன்டன் தோட்டம் தொழிற்சாலை பிரிவில், லயன் குடியிருப்பு ஒன்றில்  ஏற்பட்ட தீ விபத்தில் மூன்று வீடுகள் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளன.

நேற்று (திங்கட்கிழமை) இரவு 10.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இதன்போது பொது மக்களின் உதவியியுடன் தீ கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டு, தீ ஏனைய வீடுகளுக்கு பரவாமல்  பாதுகாக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை கொத்மலை பொலிஸார் மேற்கொண்டு வருவதுடன் மின் ஒழுக்கு காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

அத்துடன் குறித்த  தீ விபத்தினால் பெறுமதியான பெருமளவான பொருட்கள் சேதமாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.