ஹெரோயினுடன் நான்கு வெளிநாட்டவர்கள் கைது

308 0

unnamed-38ஹெரோயின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நான்கு வெளிநாட்டவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவர்கள் கல்கிசை பிரதேசத்தில் வைத்து நேற்று இரவு கைதுசெய்யப்பட்டதாக காவல்துறையினர் குறிப்பிட்டுள்ளனர்.

இதன்போது இவர்களிடம் இருந்து இரண்டு கோடி ரூபாய்க்கும் அதிக பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பாகிஸ்தானைச் சேர்ந்த ஒருவரும் மாலைத்தீவைச் சேர்ந்த மூன்று பேருமே கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இதனிடையே, தெனியாய – சிங்கராஜ வனப்பகுதியில் பெவரலிய பகுதியில் 3 கிலோ கிராம் வல்லப்பட்டை கைப்பற்றப்பட்டுள்ளது.

விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போது இந்த வல்லப்பட்டை தொகை கைப்பற்றப்பட்டுள்ளது.

இதன் பெறுமதி 6 லட்சம் ரூபாவிற்கும் அதிகம் என தெரிவிக்கப்படுகின்றது.

சம்பவம் தொடர்பில் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.