புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப் தலைமையிலான அமெரிக்கா மற்றும் ரஷ்யாவிற்கு இடையில் நல்லுறவு ஏற்படும்பட்சத்தில் உலக நாடுகளின் பல பிரச்சினைகளை தீர்க்க முடியும் என மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷவின் 71 ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு அவர் உரையாற்றிய போதே அவர் இந்த கருத்தினை தெரிவித்துள்ளார்.
இதுதவிர, அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவி ஏற்றதன் பின்னர் இலங்கை மீதான அமெரிக்காவின் தலையீடுகள் குறைவடையும் என தாம் நம்புவதாக மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டதாக ‘த ஹிந்து’ செய்தி வெளியிட்டுள்ளது.