கொரோனா சட்டங்களை ஒரு குடும்பமோ அதிகாரத்தில் இருப்பாேராே மீற முடியாது!

283 0

கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு நாட்டிலுள்ள அனைவருக்கும் உள்ளது. ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது என்று சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் அனில் ஜயசிங்க தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

‘நிலைமைகள் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதை எம்மால் உறுதிப்படுத்த முடியும். இப்போது வரையில் தனிமைப்படுத்தல் முகாம்களில் உள்ளவர்களிடம் மட்டுமே வைரஸ் தொற்று கண்டறியப்பட்டு வருகின்றது. அதற்கும் அப்பால் வெளிநாடுகளில் இருந்து வரவழைக்கப்பட்டவர்களில் அதிகளவில் நோய் கண்டறியப்பட்டு வருகின்றது.

இலங்கைக்குள் கொரோனா தொற்றுநோய் பரவலை கட்டுப்படுத்த நாம் எவ்வளவு முயற்சிகளை எடுத்தும் ஒரு சிலர் அவற்றை மீறி செயற்பட்டு வருகின்றமையும் அவதானிக்க முடிகின்றது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் பொறுப்பு வெறுமனே எமக்கோ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மட்டுமே உள்ள கடமை அல்ல.

ஒரு குடும்பமோ அல்லது அதிகாரத்தில் உள்ள எவரும் அதனை மீறமுடியாது. அவ்வாறு மீறுவதனால் நாம் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் வீணாகின்றது என்பதையும் நாம் கூறிக்கொள்ள விரும்புகின்றோம்’. – என்றார்.