அவுஸ்ரேலிய நுழைவு அனுமதியில் மாற்றம் – இலங்கையர்களுக்கும் பாதிப்பு

281 0

australia-flag-720x480அவுஸ்திரேலியாவில் தொழில்புரியும் வெளிநாட்டவர்களுக்கான நுழைவு வழங்கும் நடைமுறையில் மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ளதாக ‘வீக்கன்ற் ஒஸ்ரேலியா’ செய்தி வெளியிட்டுள்ளது.

முன்னதாக, தொழிலுக்கான உடன்படிக்கை மேற்கொண்டவர்கள் அவுஸ்திரேலியாவில் தங்கி தொழில் தேடுவதற்காக 90 நாட்கள் அவகாசம் வழங்கப்படும்.

எனினும் தற்போது அது 60 நாட்களாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளன.

நேற்றைய தினத்தில் இருந்து இந்த புதிய நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்ளது.

இதனால் இலங்கையர்கள் உள்ளிட்ட வெளிநாட்டவர்கள் நெருக்கடியினை எதிர்நோக்குவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அவுஸ்திரேலிய நாட்டவர்களுக்கு அந்த நாட்டிலேயே தொழில்வாய்பை ஏற்படுத்திக்கொடுக்கும் நோக்கில் இந்த நடைமுறை பின்பற்றப்படுவதாக அந்த நாட்டு தகவல்கள் தெரிவிக்கின்றன.