லண்டன் குறைடன் பகுதியில் தமிழர் வீடு ஒன்றில் பிறந்த குழந்தைக்கு முப்பத்தி ஓராம் நாள் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.
இதன் பொழுது அங்கு முப்பத்தி ஐந்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் பங்கெடுத்தனர், இங்கு மக்கள் திடீரென கூடியதை அறிந்து அதிர்ச்சி அடைந்த அயல் வீட்டார், காவல்துறையினருக்கு தகவல் வழங்கியுள்ளனர்.
விரைந்து வந்த காவல்துறை அணியினர் அங்கு பங்கு கொண்ட மக்களை சுற்றிவளைத்தனர் தீவிர விசாரனை செய்தனர்.
கொரனோ நோயின் பொழுது அத்துமீறி சட்டவிரோதமாக அரசின் அறிவுறு த்தலை மதியாது நிகழ்வுகளை ஏற்பாடு செய்தமை, அவ்வேளை அங்கு சமுக இடைவெளியை பின்பற்ற மறுத்து பெரும் திரளாக மக்கள் கூடியதை போலீசார் ஆரம்ப கட்ட விசாரனையில் அறிந்து கொண்டுள்ளனர்.
இன் நிகழ்வில் கலந்து கொண்ட ஒவ்வொரு வருக்கும் தலா ஆயிரம் பவுண்டுகள் தண்ட பணம் விதித்துள்ளனர்.
இலங்கை ரூபாயில் 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாய்களாகும் மேற்படி பணத்தினை எதிர்வரும் பதின் நான்கு நாட்களுக்குள் இவர்கள் செலுத்த வேண்டும் தவறின் அது இரட்டிப்பாகும், அவற்றையும் , செலுத்த தவறினால் அவர்கள் நீதிமன்றில் முன்னிலை படுத்தும் விதியுள்ளது என மேலும் பொலிசார் அறிவுறுத்தியுள்ளனர்.
பிரிட்டனில் நாள்தோறும் 400 க்கு மேற்பட்ட மக்கள் தொடர்ந்து பலியாகி வருகின்றனர் இதுவரை 38,489 பேர் பலியாகியுள்ளனர் ஒருவர் எடுத்த முடிவினால் பலர் பாதிக்க பட்டுள்ளனர்.
இதில் கலந்து கொண்டவர்களில் ஒருவர் கூட இதனை சிந்திக்கவில்லையா .. ? லண்டன் பொலிசாரின் இந்த சேவைக்கு சமூக ஆர்வலர்கள் பாராட்டுக்களை தெரிவித்து கொள்கிறது.
இது போன்ற செயல் இத்தாலியிலும் இடம்பெற்றமை குறிப்பிட தக்கது , மக்களே வீடுகளை விட்டு வெளியில் செல்லாதீர்கள் என்ற வாசம் அனைத்து பகுதியிலும் வெளியிட பட்டு வரும் நிலையிலும் அதையும் மீறி இப்படி ஒரு நிகழ்வா …? மக்கள் மிகுந்த ஒத்துளைப்பு வழங்க வேண்டும் என கேட்கப்பட்டுள்ளது.