யெமனில் போர்நிறுத்தத்தின் பின்னரும் தாக்குதல்

288 0

article-doc-ci516-4jy2ar5bgf10dfb51f785df819b1-754_634x422யெமனில் தாக்குதல்களை மேற்கொண்டுவரும் சவுதி தலைமையிலான கூட்டணிப்படை 48 மணி நேர போர் நிறுத்தத்தை அறிவித்துள்ளது.

ஹூதி கிளர்ச்சியளர்களுக்கு எதிராக போரிடுகின்ற யெமன் அரசாங்கத்திற்கு ஆதரவாக சவுதி படையினர் யெமனில் தாக்குதல்களை நடத்திவருகின்றனர்.

இந்த நிலையில் சவுதியினால் இந்த போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டது.

எனினும் இந்த போர்நிறுத்தம் அமுலுக்கு வந்ததின் பின்னரும் தொடர்ச்சியாக தாக்குதல்கள் நடத்தப்பட்டுவருவதாக சர்வதேச தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏமனில் 18 மாதங்களாக நடைபெற்று வரும் போரை முடிவுக்கு கொண்டுவரும் வகையில், அமெரிக்கா உட்பட்ட சர்வதேச நாடுகள் பல்வேறு அழுத்தங்களை மேற்கொண்டுள்ளன.

அத்துடன் யெமனில் மேற்கொள்ளப்படும் தாக்குதல்களால் சிறுவர்கள் உட்பட பொதுமக்கள் பாரிய அளவில் போசாக்கு தொடர்பான பிரச்சினைகளுக்கு முகம் கொடுத்துள்ளதாக தெரவிக்கப்படுகின்றது.