இலங்கையில் முச்சக்கர வண்டி ஓட்டுனர்களின் வயது எல்லை அதிகரிக்கப்படவுள்ளது

350 0

three_wheelersமுச்சக்கரவண்டி ஓட்டுனர்களின் வயது எல்லையை 18 வயதில் இருந்து 25 வயதாக உயர்த்தப்படவுள்ளது.

வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை இந்த யோசனையை முன்வைத்துள்ளது.

பயணர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வீதி பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை முழுவதிலும் சுமார் 11 லட்சம் முச்சக்கர வண்டிகள் பயன்படுத்தப்படுகின்றன.

இந்த நிலையில் முச்சக்கர வண்டிகளின் மூலமான விபத்துக்கள் அதிகரித்துவருகின்றன.

இந்த நிலையில் இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.