வெலிக்கடை முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை பிடியாணை பெற்று கைது செய்ய பணிப்பு

278 0

வெலிக்கடை பொலிஸ் நிலையத்தின் முன்னாள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியை கைது செய்ய பிடியாணை பெற்றுக்கொள்ளுமாறு சட்டமா அதிபர் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவுக்கு அறிவுறுத்தியுள்ளார்.

முன்னாள் அமைச்சர் பாட்டலி சம்பிக்க ரணவக்க தொடர்புப்பட்டதாக கூறப்படும் விபத்து சம்பவத்தில் தவறான சாட்சியங்களை தயாரிப்பதற்காகவே அவரை கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு சட்டமா அதிபர் பணித்துள்ளார்.

2016 இல் ராஜகிரியவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்று தொடர்பாக கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பாட்டலி சம்பிக்க ரணவக்க கடுமையான பிணை நிபந்தனைகளின் அடிப்படையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.