தமது கணவருக்கு உரிய சிகிச்சைகளை வழங்காததின் காரணமாகவே மரணித்ததாக கூறி இலங்கையின் பெண் மருத்துவர் ஒருவர் தாக்கல் செய்த மனுவின் அடிப்படையில் அவருக்கு 335 ஆயிரம் பவுண்களை நட்ட ஈடாக செலுத்துமாறு பிரித்தானிய மேல்நீதிமன்றம் ஒன்று உத்தரவிட்டுள்ளது.
பிரித்தானியாவின் வொட்போட் பொது மருத்துவமனையின் மருத்துவ பயிற்சி ஆலோசகராக பணிபுரியும் குமுது ரூபசிங்க என்ற குறித்த இலங்கை பெண் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.
குறித்த மருத்துவமனையில் பணியாளராக பணியாற்றிய குறித்த பெண்ணின் கணவர் ரொஹான் ரூபசிங்க என்பவர் மாரடைப்பு காரணமாக 2010ஆம் ஆண்டு மரணமானார்.
எனினும் மருத்துவமனையின் கவனயீனம் காரணமாகவே தமது கணவர் மரணமானதாக குறித்த பெண் முறையிட்டிருந்தார்.
அத்துடன் தமது கணவரின் மரணம் காரணமாக தமது இரண்டு பிள்ளைகளும் தாமும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
இந்தநிலையிலலேயே, அவருக்கு 335 ஆயிரம் பவுண்களை நட்ட ஈடாக செலுத்துமாறு பிரித்தானிய மேல்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.