சிறிலங்காவில் சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக மஹிந்த ராஜபக்ஷ பதவியேற்றுள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷ முன்னைலையில் அவர் குறித்த அமைச்சுப்பதவியை பொறுப்பேற்றார் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு அறிவித்துள்ளது.
சமூக வலுவூட்டல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி அமைச்சராக மறைந்த ஆறுமுகன் தொண்டமான் கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.