இலங்கை போக்குவரத்துச் சபை சேவையில் ஈடுபடுத்தும் பேருந்துகளின் எண்ணிக்கையை இன்று (திங்கட்கிழமை) முதல் அதிகரிக்க தீர்மானித்துள்ளது.
இதன்போது மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்துக்கு முக்கியத்துவம் வழங்க எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் கிங்சிலி ரணவக்க தெரிவித்தார்.
இதேவேளை, ரயில் பயணங்களையும் இன்று முதல் அதிகரிக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
அதற்கமைய இன்று 33 ரயில் பயணங்களை முன்னெடுக்கவுள்ளதாக ரயில்வே திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்த கூறினார்.
கொரோனா காரணமாக ஸ்தம்பித்திருந்த நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதற்கு போக்குவரத்து சேவையினை வழமை போன்று முன்னெடுப்பது அவசியம் என அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.