ஆறுமுகன் தொண்டமானின் மறைவையடுத்து ஏற்பட்டுள்ள கட்சித் தலைமை வெற்றிடத்தை உரியமுறையில் நிரப்பும் வரையில் ஐவரடங்கிய இடைக்கால நிர்வாக குழுவொன்று நியமிக்கப்பட்டிருக்கிறது.
சிவலிங்கம், சிவராசா, மாரிமுத்து, செந்தில் தொண்டமான், ரமேஷ் ஆகியோரே இவ்விடைக்கால குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
அமரர் ஆறுமுகன் தொண்டமானின் இறுதிக் கிரியைகளுக்கு முன்னர், முத்து சிவலிங்கம் தலைமையில் கூடிய பொதுக்குழுவே இத் தீர்மானத்தை எடுத்துள்ளது.