11ஆவது மரணம் பதிவானது

260 0

கொரோனா வைரஸ் தொற்றால் மற்றுமொருவர் உயிரழந்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்றால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11ஆக அதிகரித்துள்ளது.

குவைட்டில் இருந்து நாடு திரும்பி ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்தவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

45 வயதுடைய ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாக சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.