கடந்த அரசாங்கத்தினால் பாடசாலை மாணவர்களுக்காக 45 இலட்சத்திற்கு அறிமுகப்படுத்தப்பட்ட சுரக்ஷா காப்புறுதி பாதுகாப்பு திட்டத்திற்கான புதிய விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்வதை குறித்த காப்பீட்டு நிறுவனம் இடைநிறுத்தியுள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
<div>கண்டியில் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
தமது அரசாங்கம் மேற்கொண்ட ஒப்பந்த காலம் நேற்றோடு நிறைவடைவதன் காரணமாக குறித்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
எவ்வாறாயினும், இது தொடர்பில் அமைச்சரவைக்கு அறிவுப்பு ஒன்றை விடுக்கவுள்ளதாக கல்வியமைச்சின் செயலாளர் என்.எச்.எம் சித்ரானந்த தெரிவித்தார்.