வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள செய்தி

261 0

தென்மேற்கு பருவ மழை நாடு முழுவதும் படிப்படியாக அதிகரிதது வருவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

அதன்படி மேல், சபரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களின் சில பகுதிகளில் மழை பெய்வதோடு கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் பொலனறுவை மாவட்டத்திலும் இன்று (01) பிற்பகல் 2.00 மணிக்கு பின்னர் இடைக்கிடையே மழை பெய்யக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் காற்றின் வேகமானது மணிக்கு 40 கிலோமீற்றர் வேகத்தில் வீசக்கூடுமெனவும் வளிமண்டலவியல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.