ஊரடங்கு உத்தரவு தொடர்பில் ஜனாதிபதி ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள தகவல்

364 0

நாடு முழுவதும் அமுல்படுத்தப்பட்டிருந்த ஊரடங்கு சட்டம் இன்று அதிகாலை 4 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நேற்று முன்தினம் இரவு ; 10 மணி முதல் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது.

எவ்வாறாயினும் இன்று முதல் எதிர்வரும் 3ம் திகதி வரையில் அனைத்து மாவட்டங்களிலும் இரவு 10 மணி முதல் அடுத்த நாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு உத்தரவு அமுலாக்கப்படும் என ஜனாதிபதி ஊடகப் பிரிவு முன்னதாக அறிவித்திருந்தது.

பின்னர் ஜுன் 4ம் மற்றும் ஐந்தாம் திகதிகளில் நாடு முழுவதும் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.
ஜுன் 6ம் திகதி முதல் சகல மாவட்டங்களிலும் மீள் அறிவித்தல் வரையில் இரவு 10 மணி முதல் மறுநாள் அதிகாலை 4 மணி வரையில் ஊரடங்கு சட்டம் அமுலாக்கப்படவுள்ளது.

கொழும்பு மற்றும் கம்பஹா தவிர்ந்த ஏனைய அனைத்து மாவட்டங்களுக்கும் இடையிலான போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.