முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி நேற்று(19) காலை நளினையை முருகன் சந்தித்து பேசினார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கு கைதிகளான நளினி வேலூர் பெண்கள் ஜெயிலிலும், அவரது கணவர் முருகன் வேலூர் ஆண்கள் ஜெயிலிலும் அடைக்கப்பட்டு தண்டனை அனுபவித்து வருகிறார்கள். கோர்ட்டு உத்தரவுப்படி நளினியும், முருகனும் 15 நாட்களுக்கு ஒருமுறை சந்தித்து பேசி வருகிறார்கள். அதன்படி, இன்று காலை 7.50 மணி முதல் 8.20 மணி வரை பெண்கள் ஜெயிலில் உள்ள நளினியை, முருகன் சந்தித்து பேசினார்.
இதையடுத்து முருகன் மீண்டும் ஆண்கள் ஜெயிலுக்கு அழைத்துச் செல்லப்பட்டு அடைக்கப்பட்டார். பாதுகாப்பு பணியை டவுன் துணை போலீஸ் சூப்பிரண்டு ஆரோக்கியம் மற்றும் போலீசார் மேற்கொண்டனர்.