திருகோணமலை மூதூர் பிரதேசத்தில் 2006ஆம் ஆண்டு இடம்பெற்ற படுகொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை கடந்த 20 வருடங்களுக்குப்பின்னர் கடந்த வாரமே விசாரணைக்கெடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதன் இரண்டாம் கட்ட விசாரணை நேற்று (வெள்ளிக்கிழமை) அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தில் நடைபெற்றது.
இதில் ஒரு பெண் தனது பெண்பிள்ளையை இராணுவத்தினர் சுட்டுக்கொன்றதாகவும் மற்றயவர் தனது ஏழு பிள்ளைகளையும் இராணுவத்தினர் தனது கண்முன்னே சுட்டுக்கொன்றதாகவும் சாட்சியமளித்தார். நீதிபதி முன்னிலையில் முன்னிலையான சாட்சியாளர்களில் ஒரு பெண் தன் பிள்ளைகளின் படுகொலைக்ள தொடர்பில் விபரிக்கும்போது நீதிமன்றத்தில் மயங்கி வீழ்ந்துள்ளார்.
இதுவரை இந்த வழக்கில் 14 பேர் சாட்சியமளித்துள்ளனர். இந்த வழக்கு தொடர்பில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ள ஆறு இராணுவத்தினரில் மூவர் சாட்சியாளர்களால் தனித்தனியே இதுவரை அடையாளம் காட்டப்பட்டுள்ளனர். இதனையடுத்து எதிர்வரும் திங்கட்கிழமை சாட்சி விசாரணை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.