உத்தர பிரதேசத்தில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 43 பேர் பலியானது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.உத்தர பிரதேசம் மாநிலத்தில் இடி மின்னலுடன் கூடிய மழை நேற்று முன்தினம் முதல் பெய்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் உ.பி.யில் மழை தொடர்பான விபத்துகளில் சிக்கி 43 பேர் பரிதாபமாக பலியாகி உள்ளனர்.
இதில், உன்னாவில் 8 பேர், கன்னோஜில் 5 பேர், லக்னோவில் 2 பேர் உள்பட மொத்தம் 43 பேர் உயிரிழந்துள்ளனர்.
இடி மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும் பலர் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இடி மின்னல் தாக்கியும், வீட்டின் சுவர் இடிந்து விழுந்தும் பலர் இறந்துள்ளனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என முதல் மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
மேலு, மழை தொடர்பான விபத்துக்களில் உயிரிழந்தோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்த அவர், நிவாரணமாக தலா 4 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.
அடுத்த 24 மணி நேரத்துக்கு இடி, மின்னல் மற்றும் காற்றுடன் கூடிய மழை பெய்யும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.