பாகிஸ்தானில் ஒரே நாளில் கொரோனா தொற்று 2,429 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது.
பாகிஸ்தானில் நாளுக்கு நாள் கொரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அந்த வகையில் ஒரே நாளில் அங்கு கொரோனா 2,429 பேரை பாதிப்புக்கு உள்ளாக்கியதுடன், 78 பேரின் உயிரையும் பறித்துள்ளது. இதனால் பாகிஸ்தானில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 67,500-ஐயும், பலி எண்ணிக்கை 1,400-ஐயும் நெருங்கி உள்ளது.
பாகிஸ்தானின் போதைப்பொருள் கட்டுப்பாட்டு துறை மந்திரி ஷெர்யார் அப்ரிடி தனது டுவிட்டர் பக்கத்தில், தனக்கு கொரோனா பாதிப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார். அதில், “நான் மருத்துவர்கள் கூறியபடி, வீட்டில் என்னை நான் தனிமைப்படுத்தி உள்ளேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இதற்கிடையே கொரோனா வைரசை எதிர்த்து போராட இங்கிலாந்து 4.39 மில்லியன் பவுண்டை பாகிஸ்தானுக்கு வழங்க இருப்பதாக, பாகிஸ்தான் நாட்டுக்கான இங்கிலாந்து அதிகாரி ஒருவர் தெரிவித்து உள்ளார்.
.