வடக்குக் கிழக்கு நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு விமானப் பயண ஒழுங்குகள் செய்துகொடுக்கப்படவேண்டுமென சிறீலங்காப் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வலியுறுத்தியுள்ளார்.
சிறீலங்கா நாடாளுமன்றத்தில் நேற்று நடைபெற்ற அதிபர், பிரதமர் நாடாளுமன்றத்துக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான வரவு செலவுத்திட்ட குழுநிலை விவாதத்தில் உரையாற்றியபோதே ரணில் விக்கிரமசிங்க மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அத்துடன், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியம் மற்றும் கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ளும் உறுப்பினர்களுக்கு தற்போது நாளொன்றுக்கு வழங்கப்படும் 500 ரூபாக் கொடுப்பனவு 2,500 ரூபாவாக அதிகரிக்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன், தமது தொகுதிகளில் பணிகளை மேற்கொள்வதற்கு மேலதிகமாக 1 இலட்சம் ரூபா கொடுப்பனவு வழங்கப்படவேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வசதிகளைச் செய்துகொடுக்காமல் அவர்களிடமிருந்து மேலதிக பொறுப்புணர்வுகளை எதிர்பார்க்கமுடியுமா? எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
அத்துடன், அமெரிக்காஇ இந்தியாவில் விமானப் பயணச்சீட்டுகள் உள்ளிட்ட பல வசதிகள் வழங்கப்படுகின்றன. வடக்கு கிழக்கைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு நாம் விமானப்பயண வசதிகளைச் செய்து கொடுக்க வேண்டும். என்றும் அவர் தெரிவித்தார்.