99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த தீர்மானம்

284 0

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 99 பேருடைய கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு இன்று ஏகமனதாக தீர்மானித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியில் வேட்புமனு தாக்கல் செய்த ஐக்கிய தேசிய கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பனிர் 99 பேருக்கு எதிராக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த நபர்களின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த கோரி கட்சித் தலைவர் ரணில் விக்கிரமசிங்க மேற்கொண்ட தீர்மானத்துக்கு இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.