‘இடுகம’ நிதியத்தினால் PCR பரிசோதனைகளுக்கு 100 மில்லியன் ரூபாய் வழங்க தீர்மானம்

292 0

கொவிட் -19 தொற்றாளர்களை இனங்காணும் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்காக ´இடுகம´ கொவிட்- 19 சுகாதார, சமூக பாதுகாப்பு நிதியத்தில் இருந்து 100 மில்லியன் ரூபாய்களை சுகாதார அமைச்சுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

அதற்கு மேலதிகமாக கொவிட் 19 வைரஸ் தொற்று குறித்து பொதுமக்களை தௌிவுபடுத்தும் நடவடிக்கைகளுக்காக மேலும் 100 மில்லியன் ரூபாய்களை குறித்த நிதியத்தில் இருந்து பெற்றுக் கொடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவை பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார்.