பாடசாலை ஆசிரியர்களுக்கு பரிசில்களை வழங்குவதற்காக மாணவர்கள் நிதி சேகரிப்பதை தடுப்பதற்காக புதிய சுற்றுநிரூபம் ஒன்றை வெளியிட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கல்வியமைச்சர் அகில விராஜ் காரியவசம் இதனை தெரிவித்துள்ளார். இவ்வாறு நிதி சேகரிப்பதன் மூலம் இலவசக் கல்விக்கு அச்சுறுத்தலாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே பாடசாலைக்குள் மாணவர்கள் அழுத்தத்திற்கு உள்ளாவதை தடுக்கும் நோக்கிலே இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெற்றோர்களிடம் இருந்து கிடைத்த கோரிக்கைகளை ஆராய்ந்து பாரத்ததன் பின்னரே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குளியாபிட்டிய, நக்காவத்தை மஹிந்த தேசிய பாடசாலையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கல்வியமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.