கொரோனா தொற்றாளர் எண்ணிக்கை 1500ஐ தாண்டியது

274 0

கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளான மேலும் 17 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதனையடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 1503 ஆக அதிகரித்துள்ளது.

இன்றைய தினத்தில் மாத்திரம் 34 பேர் கொரோனா வைரஸ் தொற்றுடன் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இதுவரை 745 பேர் பூரண குணமடைந்துள்ளதுடன், 748 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.