அக்கரைப்பற்று – ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் மற்றும் அதன் திட்டமிடல் பணிப்பாளர் ஆகியோர் இலஞ்ச ஆணைக்குழுவின் விசாரணை அதிகாரிகளால் இன்று (28) கைது செய்யப்பட்டுள்ளனர்.
வீதி நிர்மாணத்திற்காக ஒப்பந்தம் ஒன்றை பெற்றுக் கொடுப்பதற்காக உத்தியோகபூர்வமற்ற ஒப்பந்தக்காரர் ஒருவரிடம் இருந்து மூன்று இலட்சம் ரூபாயினை இலஞ்சமாக பெறும் போது குறித்த அதிகாரிகள் இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த ஒப்பந்தத்தின் பெறுமதி 60 இலட்சம் ரூபாய் என தெரிவிக்கப்படும் நிலையில், அதற்காக 3 இலட்சம் ரூபாவினை குறித்த அதிகாரிகள் இலஞ்சமாக பெற முயற்சித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.