ஆறுமுகன் தொண்டமானுக்கு நாடாளுமன்றில் இறுதி அஞ்சலி

296 0

மறைந்த ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடலுக்கு நாடாளுமன்றத்தில் இன்று அஞ்சலி செலுத்தப்பட்டது.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உள்ளிட்ட முன்னாள் நாடாளுமன்ற  உறுப்பினர்கள் ஆறுமுகன் தொண்டமானின் பூதவுடல் தாங்கியப் பேழையை நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிக்கு எடுத்துச் சென்றனர்.

இதனைத் தொடர்ந்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோர் அன்னாரின் பூதவுடலுக்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினர்.