மட்டு மீனவர்களால் பிடிக்கப்பட்ட 500 கிலோ எடை கொண்ட இராட்சத திருக்கை மீன்!

648 0

500 கிலோ எடை கொண்ட பாரிய இராட்சத திருக்கை மீன் நேற்று மாலை மட்டக்களப்பு பூநொச்சிமுனை மீனவர்களினால் பிடிக்கப்பட்டுள்ளது.

தற்போது ஏற்பட்டுள்ள பாரிய கடல் கொந்தளிப்பு காரணமாக குறித்த பாரிய திருக்கை மீன் கடல் அலைகளினால் கரைக்கு அடித்து வரப்பட்ட நிலையில் அப்பகுதி மீனவர்கள் இம்மீனைப் பிடித்துள்ளனர்.

குறித்த மீன் கரைக்கு பெருமளவு மீனவர்களால் இழுத்து வரப்பட்டு வெட்டப்பட்டு சுமார் ஒரு இலட்சம் ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்டதாகவும் குறித்த மீனின் பூ மாத்திரம் 50 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாகவும் மீனவர்கள் தெரிவித்தனர்.