யேர்மனியில் சமூக இடைவெளி விதிகள் யூன் 29 வரை நீடிப்பு!

643 0
ஜேர்மனியில் சமூக இடைவெளியைப் பின்பற்றும் நடைமுறையை அடுத்த மாதம் 29ஆம் திகதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. இதற்கான அறிவித்தலை அறிவித்தார் சான்ஸ்சிலர் ஏங்கலா மெர்க்கல்.

10 பேர் வரை பொது இடங்களில் ஒன்றுகூட அனுமதிக்கப்படுவர். அடுத்தவர்களுடன் நேரடித் தொடர்பில் வருவதை குறைத்துக்கொள்ளவேண்டும்.
ஜேர்மனியின் மத்திய அரசாங்கமும் 16 மாநிலங்களும் இணக்கம் கண்டுள்ளன.
சில மாநிலங்கள் அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளால் அதிருப்தியடைந்துள்ளன. சில மாநிலங்கள் கொரோனா நோய்க்கு எதிரான கட்டுப்பாடுகளை முற்றிலுமாக நீக்கிவிட விருப்பம் தெரிவித்துள்ளன.
ஜேர்மனியில் சுமார் 179,000 பேர் கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். 8,300 பேர் பலியாகியுள்ளனர்.
எனினும் வைரஸ் பரவில் அதிகரித்தால்  விதிமுறைகளை அமல்படுத்தவேண்டிவரும் என்று அதிகாரிகள் எச்சரித்துள்ளமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.