மாணவர்களின் கல்வி சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும்-வடக்கு முதல்வர்(காணொளி)

324 0

cm-voiceமாணவர்கள் ஊக்கப்படுத்தப்பட்டு உயர்கல்விகளில் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக்கொள்ளக்கூடிய வகையில் அறிவு சீரான வளர்ச்சிப் பாதையில் செல்வதை உறுதிப்படுத்த வேண்டும் என வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்தார்.

வடக்கு மாகாண பாடசாலைகளில் ஐந்தாம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சையில் சாதனைகளை நிலைநாட்டிய மாணவர்களைக் கௌரவிக்கும் நிகழ்வு இன்று நடைபெற்றபோது  மாணவர்களின் அறிவு வளர்ச்சி சீரான வளர்சிப்பாதையில் செல்ல வேண்டுமென தெரிவித்தார்.யாழ்ப்பாணம் இளஞ்கலைஞர் மன்றத்தில் வடக்கு மாகாண கல்விப்பணிப்பாளர் எஸ்.உதயகுமார் தலைமையில் நிகழ்வுகள் நடைபெற்றன.

மாணவர்களக்கு சதுரங்கப் போட்டியானது முன்மாதிரி நிகழ்வாக கொள்ளப்படும் என்றும் சதுரங்கப்போட்டி உள விருத்தி மற்றும் சிந்தனை விருத்திக்கு உதவும் என்றும் குறிப்பிட்டார்.அதே போன்று கணித வினாடிவினா போட்டியும் மாணவர்களை கணித பாடத்தில் மேன்மையடையச் செய்யும் என்றும் குறிப்பிட்டார்.கல்வி என்பது ஆழமாகத் தோண்டப்பட வேண்டியது என்றும் அது தோண்டத் தோண்ட வற்றாத ஊற்றாக மாறும் என்றும் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளிலுமுள்ள சாதனையாளர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று காலை, மாலை நிகழ்வாகவும் நாளையதின நிகழ்வாகவும் நடைபெறவுள்ளது.நிகழ்வின் சிறப்பு விருந்தினராக வடக்கு மாகாண கல்வி அமைச்சர் குருகுலராஜா கலந்து கொண்டார்.