யாழ்ப்பாணம் மணியந்தோட்டம் பகுதியில் சட்டவிரோதமாக கஞ்சா செடியை பயிரிட்ட ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
யாழ்ப்பாணம் மணியம் தோட்டம் பகுதியில் ஒருவர் கஞ்சா வளர்ப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன் குறித்த நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த நபரின் வீட்டின் பின்புறத்தில் றப்பர் சாடியினுள் பயிரிடப்பட்டிருந்த கஞ்சா செடிகள் மூன்றையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
இதேவேளை கைப்பற்றப்பட்டிருந்த கஞ்சா செடிகளின் பெறுமதியானது ஐயாயிரம் ரூபாவினைவிடவும் அதிகமானது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொரு கஞ்சா செடியும் 23 சென்ரி மீற்றர் உயரமானவை என்று தெரிவித்த யாழ்ப்பாண பொலிஸார் குறித்த கஞ்சா செடிகள் உட்பட கைது செய்யப்பட்ட நபரையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.