அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் பலரும் தங்களது இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
அந்தவைகயில்,சிறிலங்காவின் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தனது டுவிட்டர் பக்கத்தின் ஊடாக அமைச்சர் ஆறுமுகன் தொண்டமானின் மறைவுக்கு இரங்கல் வெளியிட்டுள்ளார்.
சிறிலங்காவின் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவும் அவருடனான தனது புகைப்படங்களை டுவிட்டரில் வெளியிட்டு, அமைச்சரின் மரணம் அதிர்ச்சியளிப்பதாகவும் தனது நண்பனின் பிரிவால் துயறுரும் குடும்பத்திற்கு அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதாகவும் பதிவிட்டுள்ளார்.
அதேநேரம், அன்னாரின் மறைவுச் செய்தியைக் கேள்வியுற்றதும், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நேற்று இரவு தலங்கம வைத்தியசாலைக்கு நேரில் சென்றுள்ளார்.
இதனையடுத்து ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “மலையக மக்கள் மீது மலையக தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் தொடர்பாக நீண்ட நேரம் எனது வீட்டில் கலந்துரையாடினோம்.
அவர் எனது மனைவி மற்றும் குடும்பத்தாருடனும் நீண்ட நேரம் கலந்துரையாடி பின்னர்தான் எனது வீட்டிலிருந்து புறப்பட்டுச் சென்றார். இதன்போது செந்தில் தொண்டமான், அவரது மகன் மற்றும் கட்சியின் முக்கியஸ்தர்களும் உடனிருந்தார்கள்.
இந்த இறுதிச் சந்திப்பின்போதும், அவர் மலையக மக்கள் தொடர்பாகவே கலந்துரையாடினார். அவர் மக்கள் மீது அதீத அன்புக் கொண்ட ஒரு தலைவராகவே கருதப்படுகிறார்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.