தமிழர் விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் வீ.ஆனந்தசங்கரி மலையகத்திற்கான விஜயமொன்றில் ஈடுபட்டுள்ளார்.மஸ்கெலியா ஸ்ரீ சண்முகநாதர் ஆலய மண்டபத்தில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொள்வதற்காகவே அவர் மலையத்திற்கு விஜயம் செய்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஈடோஸ் இலங்கை பொருளாதார அபிவிருத்தி அமைப்பின் ஊடாக மஸ்கெலியாவில் நடாத்தப்பட்டு வரும் முன்பள்ளி பாடசாலையின் 11ஆவது ஆண்டு பூர்த்தி விழா இன்று இடம்பெற்றது.ஈடோஸ் அமைப்பின் செயலாளரும் முன்னாள் யாழ் மாநகர சபை உறுப்பினருமான இரா.சங்கையா தலைமையில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.இந்த நிகழ்வில் ஆங்கில கல்வி அறிவு பரீட்சையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் மற்றும் முன்பள்ளி மாணவர்களுக்கு பரிசில்கள் வழங்கப்பட்டுள்ளது.அத்துடன், கலை நிகழ்வுகள் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.