தனிமைப்படுத்தல் -பிசிஆர் சோதனைகள் குறித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் கரிசனை

339 0

இலங்கையில்பின்பற்றப்படும் தனிமைப்படுத்தல் நடைமுறைகள் குறித்தும் தனிமைப்படுத்தல் நிலையங்களில் நபர்ஒருவருக்கு மேற்கொள்ளப்படும் பிசிஆர்பரிசோதனைகள் குறித்தும் அரசமருத்துவ அதிகாரிகள் சங்கம் கரிசனை வெளியிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினர் மத்தியில் உருவான வைரஸ் பரவல் 14 நாட்கள் கடந்தும் நீடிப்பதால் வைரஸ் தொற்றிற்கு இலக்கான ஒருவர் அல்லது வெளிநாட்டிலிருந்து நாடு திரும்பியவர் எத்தனை நாள் தனிமைப்படுத்தப்படவேண்டும் என்பது தெளிவற்றதாக காணப்படுகின்றது என அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் உதவி செயலாளர் வைத்தியர் நவீன் டி சொய்சா தெரிவித்துள்ளார்.


ஒருவரை 14 நாட்களாக 21 நாட்களா தனிமைப்படுத்தவேண்டும் என்பது தெளிவற்றதாக உள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெளிவான பதிலை வழங்கவேண்டும் எத்தனை நாள் தனிமைப்படுத்தவேண்டும் என்பதை தெரிவிக்கவேண்டும் என அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதேவேளை வீடுகளில் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளிற்காக மக்களிற்கு அனுமதி வழங்குவது எவ்வளவு தூரம் பலனளிக்ககூடிய நடவடிக்கை எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
வீடுகளில் தனிமைப்படுத்தலின் வெற்றி குறித்து கேள்வி உள்ளது என தெரிவித்துள்ள மருத்துவர் சொய்சா வீடுகளிற்கு அனுப்பப்பட்டவர்கள் வீடுகளில் இருப்பார்கள் என்பதை எவ்வாறு உறுதிப்படுத்துவது எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.பிசிஆர் பரிசோதனைகளை அதிகரிக்குமாறும் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் வேண்டுகோள் விடுத்துள்ளது.