மறு அறிவித்தல் வரை இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பஸ்களில் கடமையாற்றும் ஓட்டுனர்கள் மற்றும் நடத்துனர்களின் விடுமுறை இரத்து செய்யப்பட்டுள்ளது.
இலங்கை போக்குவரத்து சபையின் பிரதி பொது முகாமையாளர் ஏ.எச்.பண்டுக்க இதனை தெரிவித்துள்ளார்.
மேலும் 5000 பஸ்களுக்கும் அதிகமான பஸ்களை இன்று முதல் சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாக இலங்கை போக்குவரத்து சபை தெரிவித்துள்ளது.
அத்துடன் இன்றைய தினத்தில் கொழும்புக்கு வருகைத்தர 27 ரயில்கள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக ரயில்வே பொது முகாமையாளர் டிலந்த பெர்ணான்டோ தெரிவித்தார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்கள் தவிர்ந்த ஏனைய மாவட்டங்களுக்கு இடையிலான பஸ் போக்குவரத்து இன்று (26) முதல் ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடதக்கது.
இதேவேளை கொழும்பு மாநகர சபையின் நடவடிக்கைகள் அனைத்தும் இன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.