பாதுகாப்பு அமைச்சிற்கு கொண்டுவரப்பட்ட டொயோடா சொகுசு வாகனம் தொடர்பிலான அனைத்து நடவடிக்கைகளை விரைவில் நிறைவு செய்யுமாறு கடந்த 9ஆம் திகதி காலை இலங்கை சுங்க போக்குவரத்து பிரிவிற்கு ஜனாதிபதி செயலகத்தில் இருந்து கிடைத்துள்ள அழைப்பு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த அதிசொகுசு வாகனம் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள நிலையில், அதன் முழுமையான சுங்க வரியின் முழுமையான தொகை 430 லட்சமாகும்.
வாகனத்தை இறக்குமதி செய்யும் போது அதன் பெறுமதி 75 ஆயிரம் டொலர் எனப்படும் 11,274,975 ரூபாயாகும். வாகனத்தின் முழுமையான பெறுமதியின் 382 வீதம் வரிப்பணமாக காணப்படுவதற்கான காரணம் வாகனத்தில் உள்ள சொகுசு வசதிகளாகும்.
எப்படியிருப்பினும் முழுமையான வரி சுதந்திரத்திற்கமைய இந்த மோட்டார் வாகனம் விடுவிக்கப்படவில்லை.
பாதுகாப்பு அமைச்சிற்காக கொண்டுவரப்பட்ட வாகனம் தொடர்பில் பாதுகாப்பு செயலகம் செயற்படுவதற்கு பதிலாக ஜனாதிபதி செயலகம் செயற்படுவது குறித்து பாரிய சந்தேகம் ஒன்று காணப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.