கிளிநொச்சி மாவட்டத்தில் மடிக்கணணி உள்ளிட்ட இலத்திரனியல் பொருட்களை வீடுபுகுந்து திருடி அவற்றை விற்பனை செய்துவரும் நபரை கிளிநொச்சி காவல் துறையினர் தேடிவந்துள்ளார்கள்.
இன்னிலையில் குறித்த கொள்ளையன் திருடிய மடிக்கணணி ஒன்றினை முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பகுதியில் உள்ள நபர் ஒருவரிடம் அடகுவைத்துள்ளார்.
குறித்த கொள்ளையன் கைதுசெய்யப்பட்ட நிலையில் புதுக்குடியிருப்பு பகுதியில் மடிக்கணணியினை வாங்கிக்கொண்டு பணம் கொடுத்த நபரும் புதுக்குடியிருப்புகாவல் துறையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் பற்றி கிளிநொச்சிகாவல் துறையினர் மேலதி விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் குறித்த கொள்ளையன் கொள்ளையடித்த பொருட்களை எங்கெங்கு விற்பனை செய்துள்ளான் என்பது தொடர்பான விபரங்களை திரட்டிவருகின்றார்கள்.