கட்டாரில் சிக்கித் தவிப்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
சிறிலங்காவின் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் ரவிநாத ஆரியசிங்க இந்த விடயத்தினைக் குறிப்பிட்டுள்ளார்.
இதுகுறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், “நேற்று(திங்கட்கிழமை) அட்டவணைப்படுத்தப்பட்டிருந்த கட்டாரிலிருந்து பயணிக்கும் ஸ்ரீ லங்கன் எயார்லைன்ஸ் விமானம் இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சர் தினேஷ் குணவர்தனவுடனான ஆலோசனைகளின் பேரில், இடைக்கால நடவடிக்கையாக அங்கு சிக்கித் தவிப்பவர்களுக்கு தங்குமிட வசதிகளை உடனடியாக ஏற்படுத்திக் கொடுக்குமாறு கட்டாரிலுள்ள இலங்கையின் பதில் தூதுவருக்கு நான் அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளேன்“ எனக் குறிப்பிட்டுள்ளார்.