அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இணைந்து பணியாற்றுமாறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு தற்போதைய அமெரிக்க ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தி உள்ளார்.
பராக் ஒபாமாவின் பதவிக் காலம் எதிர்வரும் ஜனவரி மாதத்துடன் நிறைவுக்கு வரவுள்ள நிலையில், அவர் பல்வேறு உலக நாடுகளின் தலைவர்களை சந்தித்து கலந்துரையாடி வருகிறார்.
இதற்கமைய கடந்த புதன்கிழமை அவர் ஐரோப்பிய நாடுகளுக்;கான விஜயம் ஒன்றை மேற்கொண்டார்.
இதன்போது பிரித்தானியா, இத்தாலி, பிரான்ஸ், ஸ்பெயின் உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளின் முக்கிய தலைவர்களை ஜனாதிபதி பராக் ஒபாமா சந்தித்து பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடி வருகிறார்.
இந்நிலையில், புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்புடன் இணைந்து பணியாற்றுமாறு ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுக்கு ஜனாதிபதி பராக் ஒபாமா வலியுறுத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.